ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : May 9, 2020, 2:13 PM IST

புதுச்சேரி: செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 9) நடைபெற்றது.

அப்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது, “புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று பேராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே எட்டு பேர் குணமடைந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் என மொத்தம் எட்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இதுவரை 4,111 பேர்க்கு உமிழ்நீர் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3,876 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. தற்போது புதுச்சேரியை சார்ந்தவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து இரண்டாயிரம் பேர் வருகை தர உள்ளனர். அவர்களை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம். 82 எல்லைப்பகுதி வழிகள் அடைக்கப்பட்டு அனைத்துத் துறை அலுவலர்களும் பாதுகாப்புப் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

.

இதையும் படிங்க: தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.