இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 39 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாநிலத்தில் இதுவரை ஆறாயிரத்து 677 பேருக்கு உமிழ்நீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆறாயிரத்து 593 பேருக்கு நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இதனை கண்காணிக்க 27 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நோய்த்தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில், மாநில எல்லைகளில் மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு சரியாக இல்லை.
கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு மாதங்களில் பத்து மடங்கு வரை உயர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: வேதா இல்லம் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?