ETV Bharat / bharat

வெளிமாநில தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சகம் - Stranded students

டெல்லி: அடிப்படை வசதிகளின்றி சிக்கி தவித்துவரும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Migrant
Migrant
author img

By

Published : Apr 30, 2020, 3:22 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்தனர். குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது.

இதனையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு அனுப்ப சிறப்பு போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் ஆகியோரை அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • I welcome the decision of the government to allow inter-state movement of migrant workers and students after testing them by bus.

    This has been a demand of the Congress party since mid-April.

    — P. Chidambaram (@PChidambaram_IN) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த உத்தரவை வரவேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், "இதற்கு பேருந்த வசதிகள் போதுமானதாக இருக்காது. வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் ஆகியோரை அவர்கள் மாநிலத்துக்கு அழைத்து செல்ல கிருமி நாசினி தெளிக்கப்பட்ட ரயில் தேவைப்படும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • अकेले बसें पर्याप्त नहीं होंगी। बेहतर होगा कि सेनीटाइज करके ट्रेन से अपने गृह राज्य में वापस जाने की इच्छा रखने वाले बड़ी संख्या में लोगों को पॉइंट टू पॉइंट स्थानांतरित किया जाए।

மேலும், வங்கதேசத்தில் சிக்கித் தவித்து வந்த காஷ்மீர் மாணவர்களை மீட்பதற்காக மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். மாணவர்களை மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.