ETV Bharat / bharat

ஓவைசி பாஜகவின் முகவர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு - ஓவைசி பாஜகவின் ஏஜெண்ட்

ஜெய்பூர்: அண்மையில் நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களைக் கைப்பற்றி ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி தனித்த அடையாளத்தைப் பதிவுசெய்துள்ளது. எனவே, ராஜஸ்தானிலும் ஓவைசியின் அரசியல் பரப்புரையை தடுக்கும் வகையில், காங்கிரஸ், பாஜக கட்சிகள் அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

ovaisi
ovaisi
author img

By

Published : Nov 25, 2020, 7:19 PM IST

ஏஐஎம்ஐஎம் (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவின் பீடமாகச் செயல்பட்டு வாக்குகளைப் பிரிப்பதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

நேற்று (நவ.24) ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மகேஷ் ஜோஷி, "ஓவைசி பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவை. பாஜகவின் அறிவுறுத்தலின்பேரில்தான் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், ராஜஸ்தான் மாநில மக்கள் அத்தகைய அரசியல்வாதிகளைக் கண்டிப்பாக நிராகரிப்பார்கள்" என்று தெரிவித்திருந்தார். பின்னர் அக்கருத்திலிருந்து பின்வாங்கினார்.

இதனிடையே, பாஜக பொதுச்செயலாளர் அல்கா சிங் குர்ஜார், ஓவைசி பாஜகவின் கைப்பாவை எனக் கூறியதை நிராகரித்துப் பேசினார். "அசாதுதீன் ஓவைசியும், காங்கிரசும் சமாதான கொள்கையைப் பின்பற்றி ஒத்தக் கருத்துடன் செயல்படுகிறார்கள். காங்கிரசும், ஓவைசியும் வேறு வேறு அல்ல.

ஓவைசி ராஜஸ்தானுக்குள் நுழைந்தாலும் அல்லது ராகுல் காந்தி நுழைந்தாலும் கவலையில்லை, மோடியால் செய்யப்படும் பணிகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காங்கிரசின் வெற்று கூச்சல்களை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர், மோடியை ஓவைசியுடன் இணைத்துப் பேசுவது தற்போது முடிவுக்கு வந்துள்ளது" என்றார்.

ஓவைசியை ஆதரிப்பவர்கள் பலர் ஏஐஎம்ஐஎம் கட்சியை ராஜஸ்தானுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் சமூக வலைதளத்தில் பரப்புரையை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லை மீறி செயல்படுகிறதா நீதித்துறை - என்ன சொல்கிறார் குடியரசு துணைத் தலைவர்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.