ETV Bharat / bharat

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏன்?

டெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு சார்பில் வெளியிடப்படும் எண்ணிக்கைகளில் குளறுபடி உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Congress raises question on mismatch of COVID-19 cases

author img

By

Published : Mar 23, 2020, 1:17 PM IST

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில் குளறுபடிகள் உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு நிறுவனங்கள் வெளியிடும் தரவுகளில் வேறுபாடுகள் உள்ளது ஏன்?

(நேற்று) காலை 11.45-க்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், காலை 10 மணிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் 341 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு இது குறித்து தெரியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "ஹரியானாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே சுகாதாரத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளபோது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தளத்தில் இன்னும் மூன்று என்றே குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Similarly, the no. of #Haryana #COVID19 patients are being shown far less on GOI Health Ministry Website !

    Govt of #Haryana has announced 6 Corona cases on 20 March, which rose to 8 on 21 March
    BUT
    Govt of India still refers only 3 Corona positive cases in #Haryana?
    Why?
    2/2 pic.twitter.com/TnYL3tGnqX

    — Randeep Singh Surjewala (@rssurjewala) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: கரோனாவால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.