கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜோதிராதித்திய சிந்தியாவை நீக்குவதற்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் அம்மாநிலத்தில், முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்திய சிந்தியா போர்க்கொடி தூக்கினார்.
அதன் விளைவாக இன்று காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிந்தியாவை நீக்குவதற்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.