ETV Bharat / bharat

புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம்: காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி!

புதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடரில், கருணாநிதி காலை உணவுத் திட்டத்தை நாராயணசாமி அறிவித்தது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி  புதுச்சேரி பட்ஜெட்  கருணாநிதி காலை உணவுத் திட்டம்  ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம்  karunanidhi breakfast scheme  pudhucherry budget
புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம்: காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி
author img

By

Published : Jul 22, 2020, 11:56 AM IST

Updated : Jul 22, 2020, 12:27 PM IST

புதுச்சேரி பட்ஜெட் தாக்குதலின் போது முதலமைச்சர் நாராயணசாமி, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற செயலராக உள்ள லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, கடந்த 2002 ஜூன் 14ஆம் தேதி சோனியா காந்தியால் தொடங்கிவைக்கப்பட்ட ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் நடப்பாண்டு ஜூலையில் முடக்கப்பட்டுள்ளது என ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், அந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்ட போது நான் கல்வியமைச்சராக இருந்தேன் எனக் கூறிப்பிட்டுள்ள அவர், இத்திட்டத்தை சோனியா காந்தி தொடங்கி வைத்த புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார்.

புதுச்சேரி  புதுச்சேரி பட்ஜெட்  கருணாநிதி காலை உணவுத் திட்டம்  ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம்  karunanidhi breakfast scheme  pudhucherry budget
ராஜிவ் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதனிடையே, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மங்கலம் தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் முரளிதரன் நேற்று (ஜூலை 21) ராஜீவ் காந்தி சிலையருகே தீப்பந்தத்தை ஏந்தி தனது கண்டனத்தை தெரிவித்தார்.

முதலமைச்சர் நாராயணசாமியின் ஆட்சி, காங்கிரஸ் கட்சிக்கு செய்யும் துரோகத்தை கண்டித்து அகில தலைமை கவனத்தை ஈர்க்கின்ற வகையில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அவர் தெரிவித்து சிறிது நேரம் தீப்பந்தத்தை ஏந்தி நின்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கருணாநிதி, ஸ்டாலின் மீது விமர்சனம்; திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

Last Updated : Jul 22, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.