உலகம் முழுவதும் 'வேலன்டைன் வீக்' கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று 'ஹக் டே'வை முன்னிட்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு நிமிட வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாஜகவுக்கு ஹக் டே வாழ்த்து கூறியுள்ளது.
காந்தியின் பொன்மாெழிகளுடன் தொடங்கும் அந்த வீடியோவில், "நீங்கள் என்னை வெறுக்கலாம். ஆனால் உங்கள் மீது எனக்கு துளியளவும் வெறுப்பு கிடையாது" என்று ராகுல் காந்தி மக்களவையில் பாஜக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய பேச்சும் அதன் பின்பு அவர் மோடியை கட்டிப்பிடித்த காட்சியும் இடம் பெற்றுள்ளது.
-
Same message to BJP every year. Hug don't Hate. #HugDay pic.twitter.com/3yXCzOZzCn
— Congress (@INCIndia) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Same message to BJP every year. Hug don't Hate. #HugDay pic.twitter.com/3yXCzOZzCn
— Congress (@INCIndia) February 12, 2020Same message to BJP every year. Hug don't Hate. #HugDay pic.twitter.com/3yXCzOZzCn
— Congress (@INCIndia) February 12, 2020
மேலும்,"நாட்டின் அரசியலைப் பேசி நான் நரேந்திர மோடியுடன் சண்டையிடுவேன் மாறாக அவரை வெறுக்க மாட்டேன். காங்கிரஸ் அன்பை நம்புகிறது. மாறாக வெறுப்புணர்வை அல்ல" என்று ராகுல் பேசும் பேச்சுடன் அந்த வீடியோ முடிகிறது. வித்தியாசமான முறையில் பாஜகவுக்கு ஹக் டே வாழ்த்து சொன்ன காங்கிரஸின் அந்த குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ‘வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ - சுனில் அரோரா