இந்திய நாட்டின் பொருளாதார தடைகளை உடைத்த பாஜக அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கடந்த 5ஆம் தேதி முதல் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பேசிய முதலமைச்சர், மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாஜக செய்த துரோகத்தை பட்டியலிட்டார். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை பாஜக வழங்கவில்லை. மேலும், பல்வேறு இடையூறுகள் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : பாஜக அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது - தங்கபாலு