உத்தரப் பிரதேச மாநிலம் மாவ் நகரில் கோஷி நாடாளுமன்றத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதுல் ராய்க்கு ஆதரவாக மாயாவதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு தவணை முறையில் ஆராயிரம் ரூபாயை ஆட்சிக்கு வந்த பின் ஏழைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
வறுமையை ஒழிக்க இந்த திட்டம் நிரந்தர தீர்வு இல்லை. மத்தியில் நாங்கள் ஆட்சியமைத்தால், காங்கிரஸ் அறிவித்துள்ள ஆராயிரம் ரூபாய்க்கு பதிலாக ஏழைகளுக்கு நிரந்தர அரசாங்க வேலை வழங்குவோம்" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் கோஷி உள்ளிட்ட 12 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.