உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். அச்சிறுமிக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், உன்னாவ் வழக்கு பற்றியும் உத்தரப் பிரதேசத்தில் கெட்டுவிட்ட சட்டம் ஒழுங்கு குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுரேஷ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கப்படுவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
இதேபோல், காபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தாவுக்கு வருமான வரித் துறை கொடுத்த தொந்தரவு குறித்து விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சவுகதா ராய் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.