ETV Bharat / bharat

சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! - P Chidambaram Admitted in AIIMS

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு திகார் சிறையிலிருக்கும் சிதம்பரம் உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chidambaram
author img

By

Published : Oct 28, 2019, 6:56 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது.

இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானதையடுத்து, இன்று அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Intro:Body:

உடல்நல குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.. #PChidambaram

Delhi: Congress leader P Chidambaram has been taken to AIIMS (All India Institute of Medical Sciences) following deterioration in his health condition. He is currently in Enforcement Directorate's (ED) remand in connection with the INX media case

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.