ETV Bharat / bharat

அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி: ஆட்சியை தக்க வைக்க அஸ்திரம்! - siddhramaiah

பெங்களூரு: அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரை சமாதானம் செய்ய ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசின் அமைச்சர்கள், தங்களது பதவியை விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளனர்.

jds
author img

By

Published : Jul 8, 2019, 10:24 AM IST

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அதிக இடங்களை வென்றாலும், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்த ஆட்சி "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக" பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. எப்படியாவது ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா விடாது முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். அதில் 10 எம்எல்ஏக்கள் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிரச்னையை தீர்த்து ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் - ஜனதாதள கூட்டணி கட்சித் தலைவர்கள், அவசரகதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குமாரசாமியை பதவியில் இருந்து நீக்கி சித்தராமைய்யாவை முதலமைச்சராக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தனது ட்விட்டர் பக்கத்தில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

param
துணைமுதலமைச்சர் பரமேஸ்வாரவின் கருத்து

இந்நிலையில், காங்கிரஸ் - ஜனதாதள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், கவன ஈர்ப்பு தீர்மானத்தை மக்களவையில் இன்று கொண்டுவர உள்ளது.

Intro:Body:

Karnataka congress 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.