கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவரை நேரில் சென்று வரவேற்றார்.
இந்நிலையில், தும்கூருவில் உள்ள ஸ்ரீ சித்தகங்க மடத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எங்கள் அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. ஆனால் காங்கிரஸ் அதை எதிர்க்கிறது. இவர்கள் இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் தலித்துகள் இந்தியாவுக்கு வருவதை அவர்கள் எதிர்க்கின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் இதுகுறித்தெல்லாம் பேசுவதில்லை" என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், "நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திற்கு எதிரானது அல்ல, தேசத்தை பிளவுபடுத்தும் உங்களுக்கு எதிரானது. இந்த நாட்டை உடைக்க விடமாட்டோம். 1948, 1965, 1971 மற்றும் கார்கில் போர்களில் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு நிஜமாகவே நீங்கள் பதிலடி கொடுக்க விரும்பினால், பிரியாணி மற்றும் மாம்பழம் குறித்தெல்லாம் பேசுவதை முதலில் நிறுத்தங்கள்" என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் பரப்புரை