டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், மொத்தமுள்ள 70 இடங்களில் 66 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் கடைசி நேர நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட 63 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்து விட்டனர்.
இதில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நான்கு வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2003ஆம் ஆண்டில் டெல்லி தேர்தலைச் சந்தித்தபோது காங்கிரஸ், 50 விழுக்காடுகளுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுவித அரசியலில் ஈடுபட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை