ETV Bharat / bharat

18 மாநிலங்களில் காங்கிரஸ் டக் அவுட்...! - congress duck out

டெல்லி: 17ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 14 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

amit sha
author img

By

Published : May 24, 2019, 2:54 PM IST

நாட்டில் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 348 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிலும், பாஜக மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

பாஜகவின் இந்த அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 மாநிலங்கள், நான்கு ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒரு இடத்திலும் கூட வெற்றிபெறவில்லை என்றார்.

காங்கிரஸ் டக்அவுட் ஆன மாநிலங்கள்:

  1. ஆந்திரப்பிரதேசம் (25),
  2. நாகலாந்து (1),
  3. மணிப்பூர் (2),
  4. உத்தரகாண்ட் (5),
  5. சிக்கிம் (1),
  6. மிசோரம் (1),
  7. திரிபுரா (2),
  8. ஜம்மு காஷ்மீர் (6),
  9. குஜராத் (26),
  10. ராஜஸ்தான் (25),
  11. ஹரியானா (10),
  12. இமாச்சலப்பிரதேசம் (4),
  13. சண்டிகர் (1).

ஒன்றியப் பிரதேசங்கள்:

  1. லட்சத் தீவுகள் (1),
  2. டையூ டாமன் (1),
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (1),
  4. டெல்லி (7)

இதைத்தவிர, காங்கிரஸ் உத்தரப் பிரதேசம் (80), மகராஷ்டிரா (48), மேற்குவங்கம் (42), பிகார் (40), மத்தியப் பிரதேசம் (29), கர்நாடகா (28) என 267 தொகுதிகளில் வெறும் எட்டு இடங்களை மட்டுமே பிடித்துள்ளன.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் கோட்டையான அமேதி மக்களவைத் தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.