ETV Bharat / bharat

சிறுபான்மையினர் தொகுதிக்கு ஓடிப் போன ராகுல்- மோடி கடும் தாக்கு - minority seat

வர்தா(மஹாராஷ்டிரா): இந்து தீவிரவாதம் என்று கூறி காங்கிரஸ் கட்சி இந்து மக்களை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இதனால்தான் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறுபான்மையினர் தொகுதிக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

பரப்புரை மேடையில் மோடி
author img

By

Published : Apr 1, 2019, 9:07 PM IST

இந்துக்களை அவமதித்தது காங்கிரஸ்

மஹாராஷ்டிரா மாநிலம் வர்தா (Wardha) பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே, இந்து தீவிரவாதம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதைக் குறிப்பிட்டு பேசிய மோடி, சுஷில் குமார் ஷின்டே அமைச்சராக இருந்தபோது இதே மஹாராஷ்டிர மண்ணில் இந்து தீவிரவாதம் என்று பேசினார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நீதிமன்ற தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியை வெளிப்படுத்தியது என்று கூறினார்.

ஓடிய ராகுல்

5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரத்தை அவமதித்து காங்கிரஸ் பாவம் செய்துவிட்டதாக கூறிய மோடி, உலகையே தனது குடும்பமாக கருதும் இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறியதால்தான் தற்போது சிறுபான்மையினர் தொகுதிக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று சாடினார். ராகுல் காந்தி அமேதி தொகுதியுடன் கூடுதலாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருப்பதைக் கூறிப்பிட்டு மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

கழிவறையின் காவலன் நான்

தொடர்ந்து பேசிய மோடி எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் தனக்கு ஆபரணம் போன்றது என தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை கழிவறையின் பாதுகாவலர் என்று கூறியுள்ளார். கழிவறைகளைபாதுகாப்பவர்களை இழிவுபடுத்தாதா என கேள்வி எழுப்பியுள்ள மோடி, நான் கழிவறையின் பாதுகாவலன் என்றும், கோடிக்கணக்கான பெண்களின் மரியாதையின் பாதுகாவலன் என்றும் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.