ETV Bharat / bharat

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

author img

By

Published : Oct 24, 2019, 10:20 AM IST

புதுச்சேரி: நடந்து முடிந்த காமராஜர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

john kumar

புதுச்சேரி காமராஜர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜான்குமாரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 69.44 விழுக்காடு வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை எட்டு மணிக்கு தொடங்கியது.

மூன்று சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மூன்றாவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி காமராஜர் நகர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டது.

இதையும் படிங்க: #Live இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முடிவுகள் உடனுக்குடன்!

Intro:காமராஜ் நகர் இடைத்தேர்தல் காங்கிரஸ் முன்னிலை

Body:புதுச்சேரி காமராஜர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றில் 500 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது

Conclusion:காமராஜ் நகர் இடைத்தேர்தல் காங்கிரஸ் முன்னிலை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.