ETV Bharat / bharat

தனிஷ்க் விளம்பர விவகாரம்: பாஜகவை சாடும் காங்கிரஸ் தலைவர்கள்! - சசி தரூர்

டெல்லி: தனிஷ்க் ஜுவல்லரி தனது விளம்பரத்தை திரும்பபெற்றதற்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

Tanishq ad
Tanishq ad
author img

By

Published : Oct 15, 2020, 12:27 AM IST

பிரபல ஜுவல்லரி நிறுவனமான தனிஷ்க், கடந்த சில நாள்களுக்கு முன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, அவரது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதுபோல அந்த விளம்பரம் அமைந்திருந்தது.

தனிஷ்க் ஜுவல்லரியின் இந்த விளம்பரத்திற்கு இணையத்தில் ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

மறுபுறம், இது லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறும் எதிர்தரப்பினர் BoycottTanishq என்ற ஹேஷ்டாக்கையும் ட்விட்டரில் டிரெண்டாக்கினர்.

இதற்கு தனிஷ்க் ஜுவல்லரி விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில், "இந்த விளம்பரம் பொதுமக்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளதற்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேம். எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் உணர்வுகளை மதித்து, இந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனிஷ்க் ஜுவல்லரி தனது விளம்பரத்தை திரும்பபெற்றதற்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சித்துவருகின்றனர்.

இது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சஷி தரூர், "விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது நாட்டிலுள்ள அச்சுறுத்தும் சூழ்நிலையையே சுட்டிக்காட்டுகிறது. நான் வளர்ந்த இந்த நாடு அடையாளம் காணமுடியாத அளவிற்கு மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. வகுப்புவாத வெறுப்பை பரப்புவது நாம் நாட்டில் ஒரு காலம் இயல்பானதாகும் என்று ஒரு நாளும் நான் கருதியதில்லை!" என்று தெரிவித்துள்ளார்.

  • But doesn't India promote brotherhood: Divya who lent voice to Tanishq ad https://t.co/6OstCWk5qe
    -via @inshorts

    What is wrong in Tanishq Ad? Mukhtar Abbas Naqvi’s wife is a Hindu Shah Nawaz’s wife is a Hindu. Aren’t they senior BJP leaders and the Muslim Face of BJP?

    — digvijaya singh (@digvijaya_28) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிஷ்க் விளம்பரத்தில் என்ன தவறு? முக்தார் அப்பாஸ் நக்வியின் மனைவி ஒரு இந்து, அதேபோல ஷா நவாஸின் மனைவி ஒரு இந்து. இந்த மூத்த பாஜக தலைவர்கள் அக்கட்சியின் முஸ்லிம் முகமாக இருப்பதில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹத்ராஸில் தொடரும் கொடூரம் : பாலியல் வன்புணர்வுக்குள்ளான குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.