ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு எம்.என்.ஆர். பாலன் தேர்வு! - புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்வு

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.ஆர். பாலன், புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

congress balan
author img

By

Published : Sep 4, 2019, 12:41 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். இதனையடுத்து, துணைத் தலைவராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.ஆர். பாலன் தனது சுற்றுலா வளர்ச்சி கழக பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயிடம், பாலன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து அவர் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையின் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Intro:புதுச்சேரி சட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் என் ஆர்பாலன் இன்று வேட்புமனு தாக்கல்
Body:புதுச்சேரி சட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் என் ஆர்பாலன் இன்று வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை யின் சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக பதவி எடுக்கப்பட்டார் இந்நிலையில் துணைத் தலைவராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகருக்கு உண்டான பதவி காலியாக இருந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம் என்ஆர் பாலன் நேற்று தனது சுற்றுலா வளர்ச்சி கழக பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று துணை சபாநாயகருக்கு உண்டான தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராய்யிடம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் வேட்பு மனு தாக்கல் செய்தார் இந்த வேட்பு மனு தாக்கலின் போது புதுவை முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் அமைச்சர்கள் கந்தசுவாமி ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அரசு கொறடா அனந்தராமன் உடன் இருந்தனர் நாளை துணை சபாநாயகர்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பேட்டி அரசு கொறடா அனந்தராமன்

Conclusion:புதுச்சேரி சட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் என் ஆர்பாலன் இன்று வேட்புமனு தாக்கல்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.