ETV Bharat / bharat

மோசடியில் ஈடுபடும் பினராயி விஜயன் - எதிர்க்கட்சித் தலைவர் தாக்கு!

author img

By

Published : Oct 8, 2020, 2:09 AM IST

திருவனந்தபுரம்: வெளிநாட்டுவாழ் கேரள மக்களின் முதலீட்டு நிறுவனம் என்ற திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்று மோசடியில் ஈடுபட பினராய் விஜயன் தலைமையிலான அரசு திட்டமிட்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

வரும் 2021ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், வெளிநாடுவாழ் கேரள மக்களின் முதலீட்டு நிறுவனம் என்ற திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்று மோசடியில் ஈடுபட பினராய் விஜயன் தலைமையிலான அரசு திட்டமிட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வெளிநாடுவாழ் கேரள மக்களின் முதலீட்டு நிறுவனத்தில் 74 விழுக்காடு பங்குகள் புலம்பெயர் கேரள மக்களுக்கு சொந்தமானது. மீதமுள்ளது அரசுக்கு சொந்தமானது.

ஆலப்புழா, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவது இந்நிறுவனத்தின் முதன்மையான திட்டமாகும். இதனை நிறுவுவதற்கு இரண்டு முதல் நான்கு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதற்காக பொதுத்துறை நிறுவனமான சில்கிலிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு திட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் அனுமதி அளிக்கவில்லை.

பொதுத்துறை நிறுவனமான சிறையில் இருந்து நிலத்தை எடுத்து தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு எடுத்திருப்பது மோசடி செயலாகும்.

இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பினராய் விஜயன் வெளியிடவேண்டும். இந்த திட்டத்திற்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அரசியலுக்காக அரசு வேலையை கைவிட்ட இந்திய வீராங்கனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.