ETV Bharat / bharat

மே 17க்கு பின் மத்திய அரசின் திட்டம் என்ன? சோனியா கேள்வி

டெல்லி: ஊரடங்கு நீக்கப்படும்போது பின்பற்ற வேண்டியவை குறித்து மத்திய அரசு என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Sonia Gandhi
Sonia Gandhi
author img

By

Published : May 6, 2020, 7:18 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பின் மே 17 வரை நீடிக்கப்பட்டது. இருப்பினும் வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துத்தான் வருகிறது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "மே 17ஆம் தேதிக்குப் பின் என்ன நடக்கும்? எதை வைத்து ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா வேண்டாமா என்று மத்திய அரசு முடிவு செய்யும். ஊரடங்கு நீக்கப்படும்போது பின்பற்ற வேண்டியவை குறித்து என்ன திட்டங்களை அரசு வைத்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங், "ஊரடங்கு 3.0க்கு பின் என்ன நடக்கும் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், "பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் அறிவிக்கப்படும் வரை மாநிலங்கள் எவ்வாறு இயங்கும். நாங்கள் ரூ. 10 ஆயிரம் கோடி வருவாயை இழந்துள்ளோம். பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் குறித்து பிரதமரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறோம். ஆனால் இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

இதையும் படிங்க: காஷ்மீர் பத்திரிகையாளர்களால் பெருமை - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.