மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த குழந்தை, கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிக்க மாநில பாஜக தலைவர்கள் சில நாட்களாக முயற்சி செய்துவருகின்றனர். தேவைப்பட்டால், நிச்சயமாக குடியரசுத் தலைவரின் ஆட்சி அங்கு விதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களின் தீவிரம் சந்தேகமளிக்கிறது என கூறியுள்ளார்.
பிரதமரை மம்தா பானர்ஜி சந்தித்த பின்னர், பொன்ஸி ஊழல் தொடர்பான விசாரணை மந்தமானதையடுத்து, மேற்கு வங்க முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதா? என்கிற சந்தேகத்தை எழுப்பிய அவர், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி, 8 வயது சிறுவன், கணவர் உட்பட மூவர் கொடூர கொலை - மம்தாவை கேள்வி எழுப்பும் இணையவாசிகள்!