ETV Bharat / bharat

பம்பை ஆற்றில் மணல் அள்ளும் அனுமதி வழங்கியது யார்?

author img

By

Published : Jun 4, 2020, 3:10 PM IST

திருவனந்தபுரம் : சபரி மலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்காக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுப்பணித் துறையைச் சார்ந்தவர்கள் மணல் அள்ளியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பம்பையில் ஆற்றில் மணல் அள்ளும் அனுமதி வழங்கியது யார்

கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரகசிய ஹெலிகாப்டர் மூலமாக கேளர மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜான்சன் மற்றும் கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் மெஹ்ரா அந்த பகுதிக்கு ரகசிய பயணம் செய்தது எதற்காக என்பதை மக்கள் அறிய வேண்டும். வனத்துறை சிறப்புச் செயலாளர் மணல் அள்ளுவதற்கு தடைவித்துள்ளார். அப்படியானால், பொதுப்பணித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு யார் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியது.

இந்த ஊழலின் மூலம் பயன் அடைபவர்கள் யார்யாரென நாம் அறிய வேண்டும். நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையின் மூலமாக அங்கே இரண்டு தனியார் நிறுவனங்கள் இந்த ஊழலின் மூலம் பயனடைவார்கள் என அறிய முடிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித் துறையிடமிருந்தும், வனத்துறையிடமிருந்தும், மணல் அள்ளும் துறையினரிடமும் முறையான அனுமதியை பெறவேண்டும் என்ற விதி இருக்கிறது.

இப்போது மணல் அள்ளும் உரிமையை அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையினரிடம் இருந்து பெற்றுள்ளனர். இதனை ஒரு அறிவார்ந்த ராஜதந்திர சூழ்ச்சி என்று தானே சொல்ல முடியும். கேளராவில் மணல்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது.

கடந்த இரண்டு நாள்களாக அங்கே மணல் துரிதமாக அள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், வன பாதுகாப்பு அமைச்சர் கே ராஜூவுக்கு அங்கே என்ன நடக்கிறதென எதுவும் தெரியாது" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓய்வு பெற்ற கேளர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஜோஸ் கூறுகையில், நான் அங்கே ஒரு சர்வே நடத்தப்படுவதை கண்டறியவே சென்றேன் என தெரிவித்துள்ளார்.

கண்ணூரைச் சேர்ந்தவர்களான கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் ஈபி ஜெயராஜன் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் பொதுப் பணித்துறை வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.