நாடு முழுவதும் கரோனா வைரசால் 62 ஆயிரத்து 939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழல் உருவாகியுள்ளன.
இந்நிலையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு குழம்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் அஜய் மாக்கான் பேசுகையில், ''கரோனா வைரசைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைள் பற்றி அரசு அலுவலர்கள் கூறியுள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசு குழம்பியுள்ளது தெளிவாக தெரிகிறது.
மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். சரியான ஒருங்கிணைப்பு இல்லையென்றால் கரோனாவைக் கட்டுப்படுத்தில் காலதாமதம் ஏற்படும்.
டெல்லியின் முக்கிய மருத்துவமனைகளில் கரோனாவால் 92 பேர் பாதிக்கப்பட்டதாக தெரியவந்த நிலையில், அரசு 68 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும்.
கரோனா வைரஸ் விவகாரத்தில் டெல்லி அரசு அவமானகரமாக செயல்படுவது வருத்தமளிக்கிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது