ETV Bharat / bharat

'ஆம்! சமூகப் பரவல்தான், அதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்' -  கோவா முதலமைச்சர் - பிரமோத் சவாந்த் செய்தியாளர் சந்திப்பு

பனாஜி: கோவாவில் கோவிட்-19, சமூகப் பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Pramod Sawant
Pramod Sawant
author img

By

Published : Jun 27, 2020, 10:30 AM IST

கடந்த சில மாதங்களாகவே கோவாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "மாநிலம் முழுவம் தற்போது கோவிட் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு என்று இது பரவி, தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவிவிட்டது. இதை நாம் சமூகப் பரவல் என்றுதான் கூற வேண்டும். இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கோவாவில் நுழையும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இல்லையென்றால், அவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்துகிறோம். இந்தியாவில் இவ்வாறு செய்யும் ஒரே மாநிலம் கோவா மட்டுமே" என்றார்.

தெற்கு கோவாவின் வாஸ்கோ டவுன் பகுதியில் உள்ள மங்கூர் ஹில்ஸ் பகுதியையும், வடக்கு கோவாவின் மோர்லெம் கிராமத்தையும் கோவா அரசு ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும், வேறு சில பகுதிகளும் சீல்வைக்கப்பட்டு மினி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொண்டாட்டங்களின் தலைநகராகக் கருதப்படும் கோவாவில் மார்ச் 25ஆம் தேதி முதன்முதலில் நோயாளி ஒருவருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், அங்கு கரோனா பரவல் குறைந்தது.

சுமார் 23 நாள்களாக மாநிலத்தில் யாருக்கும் கோவிட்-19 உறுதிசெய்யப்படாததால், மே 1ஆம் தேதி கோவாவை கரோனா இல்லாத மாநிலமாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்தார். இருப்பினும், கோவா முதலமைச்சர் இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவதாக அப்போதே எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 44 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் கோவாவில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1039ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரவல் அதிகமா இருக்கு, ஆனா கட்டுக்குள் இருக்கு - குழப்பும் கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.