கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியாவின் நாடு தழுவிய 21 நாள் பூட்டுதலை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதேபோல் பிலிப்பைன்ஸ் நாடும் தேசிய அவசரகால நிலைக்கு உட்பட்டுள்ளது. இரண்டு நாட்டையும் ஆதரிக்கும் பொருட்டு உலகளாவிய அசோசியேட் நிறுவனம் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்துடன் 25 விழுக்காடு அதிகரித்து வழங்குகிறது.
இதனை காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
அதில் ஊழியர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேவையின் தொடர்ச்சியை பராமரிப்பதற்கும் காக்னிசன்ட் வீட்டிலிருந்து வேலை செய்ய உதவியுள்ளது.
இந்தாண்டு பிப்ரவரியில் காக்னிசன்ட் கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூருவில் இரு அலுவலகங்களை விரிவுப்படுத்தியது. பெங்களூரு நிறுவனத்தில் 28 ஆயிரம் பேரும், மங்களூருவில் 700 பேரும் பணிபுரிகின்றனர்.