ETV Bharat / bharat

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரிதான் எரிபொருள் - Central government on mining

புதிய சீர்திருத்தங்கள் காரணமாக, நிறுவனங்களிடையே போட்டித்தன்மை அதிகரிக்கும், இதன் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு காரணமாக, நிலக்கரியை வெட்டியெடுப்பதில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரி
நிலக்கரி
author img

By

Published : Jan 17, 2020, 5:29 PM IST

சுரங்கத்துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சுரங்கத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் சுரங்கத்துறையில் ஈடுபடவும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. சுரங்கத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957 மற்றும் சுரங்க மற்றும் தாது சட்டம் 2015இல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சுரங்கத்துறையில் போட்டிகள் ஏற்பட்டு, உற்பத்தி அதிகரிக்கும். தொடர்ந்து, தாதுக்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. புதிய சட்டசீர்திருத்தம், தாதுக்களின் விலை குறைப்புக்கு வழிவகுத்தாலும், சுரங்கத் தொழிலில் உள்ள சிக்கல்களை முழுமையாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

Coal is fuel for nations economic growth
நிலக்கரி 1

சுரங்கத்துறையில் அதிகளவில் போட்டியாளர்களை கொண்டுவருவதற்கு, அரசு தரப்பில் இருக்கும் தடைகளை முற்றிலும் நீக்கவேண்டும். இதனால், 100 விழுக்காடு வெளிநாட்டு முதலீட்டை கவர முடியும். இதுவரை, இந்தியாவில் அனுபவமுள்ள மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே சுரங்கத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டன. இவர்களே ஏலத்திலும் பங்கெடுத்தனர். இப்போதாவது, வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்ததற்கு நன்றி.

இதன் காரணமாக பீபோடி, க்ளென்கோர், ரியோடின்டோ போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உருவாகியுள்ளது. சிமின்ட், இரும்பு மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப நிலக்கரி உற்பத்தியை உறுதி செய்வது அவசியமாகிறது. கடந்த ஆண்டு நிலக்கரி தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள அதிகப்படியான இடைவெளி காரணமாக வெளிநாடுகளில் இருந்து 23 பில்லியன் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்தது. உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்கும் போது, 13 கோடி டன் நிலக்கரி இறக்குமதி குறையும். இதனால், பெருமளவு செலவினம் குறையவும் வாய்ப்பு உருவாகும்.

நிலக்கரி 2

புதிய சீர்திருத்தம் காரணமாக, நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க அதிக போட்டி நிலவும். நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என மத்திய அரசு நம்புகிறது. நிலக்கரி உற்பத்தி மற்றும் அதனை பிரித்தெடுப்பதில் நம் நாட்டுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கிடைக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது. ஒவ்வோரு ஆண்டும் தேவையான அளவு நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால், தொழில்துறை மிகவும் பாதிக்கப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் முக்கால்வாசி பங்கு வகிக்கிறது.

ஆனால், இந்த நிறுவனம் தன் இலக்கை எட்டுவதில் பின்தங்கியிருப்பதால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், அரசுக்கு அதிக செலவினம் ஏற்படுகிறது. சுரங்கத் தொழில் தேசிய மயமாக்கப்பட்ட பிறகு 1973ம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்தே கனரகத் தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை வழங்குவதில் இந்த நிறுவனம் இலக்கை எட்டியதில்லை. இதனால், அந்த நிறுவனங்கள் மற்ற நிலக்கரி தேவைக்காக பிற நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இதன் விளைவாகவே மோடி தலைமையிலான அரசு, சுரங்கத் துறையில் வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட சரியான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் நிலக்கரி உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என்றும் இந்த அரசு நம்புகிறது. 'மகாரத்னா' அந்தஸ்த்தை பெற்ற கோல் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு 60 கோடி டன் நிலக்கரியை வெட்டி எடுக்கிறது.

நிலக்கரி 3

2023-24ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டி எடுக்கும் வகையில் திறனையும் தொழில்நுட்பத்தையும் கோல் இந்தியா நிறுவனம் பெறவேண்டும். இல்லையென்றால், தனியார் நிறுவனங்களின் போட்டியால் நஷ்டத்தைச் சந்தித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் போல கோல் இந்தியா நிறுவனமும் மாறிவிடும்.

இதையும் படிங்க: வாழ்வதற்கான உரிமையை உறுதிபடுத்துமா நகராட்சி அமைப்புகள்?

வெளிநாட்டு முதலீடு , நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மத்திய அரசு, 30 லட்சம் கோல் இந்தியா நிறுவன ஊழியர்களின் நலனிலும் கவனத்தை கொள்ள வேண்டும். நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த உத்திரவாதத்தை கவனத்தில் கொண்டு கோல் இந்தியா நிறுவனம் இன்னும் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களை கண்டறிந்து நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய ஆற்றலுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடு பாயும் நேரத்தில் கோல் இந்தியா நிறுவனம் தன் திறனை மேம்படுத்தி இலக்குகளை எட்டுவது தேசத்தின் வளர்சிக்கு உதவியாக அமையும்.

கறுப்பு தங்கம் என்று அழைக்கப்படும் நிலக்கரியின் உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதி செய்வது போன்ற விகிதங்கள் இந்தியாவில் சற்று வித்தியாசமானது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா நாடுகளுக்கு அடுத்தடிபயாக இந்தியாவில் அதிகளவில் நிலக்கரி பூமிக்கு அடியில் புதைந்துள்ளது. அதேவேளையில், இறக்குதி செய்வதிலும் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.

நிலக்கரி 4

அதாவது 16.2 விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை நம் நாட்டுக்கு இறக்குமதி செய்கிறோம். இந்த பட்டியலில் 16.7 விழுக்காடுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலக்கரி உற்பத்தியின் கழுத்தை நெரிக்கும் வகையில் செயல்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட தொழில் சட்டத்தை மீறி, தங்களை சார்ந்தவர்களுக்கு சுரங்கத் தொழிலில் ஈடுபட அனுமதி அளித்து, நிலக்கரி ஊழல் ஏற்படவும் வழிவகுத்தது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த ஊழல் காரணமாக உச்சநீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 214 நிலக்கரிச் சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்தது.

ஆனால், மோடி தலைமையிலான அரசு நிலக்கரி உற்பத்தியை ஊக்குவிக்க 10 முக்கிய கொள்கைகளை வகுத்துள்ளது. அதில், இ- பிட்டிங் (e bidding) எனப்படும் இணையதள வாயிலாக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவது முக்கியமானது. இந்த முறையால் சுரங்கங்களை ஏலம் விடுவதில், எடுப்பதில் வெளிப்படைத்தன்மை காணப்படும்.

நிலக்கரி 5

கோல் இந்தியா உள்பட மற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது குறைக்கப்பட வேண்டும். நிலக்கரி இறக்குமதி செய்ய குறைந்த அளவே இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் இப்போது வரை 29 நிலக்கரி சுரங்கங்களே ஏலம் விடப்பட்டுள்ளன.

சுரங்கங்களை ஏலம் விடுவது குத்தகைக்கு வழங்குவது போன்றவற்றில் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதில் அரசு தரப்பில் உள்ள சுணக்கங்களை களையும் நேரம் இது. எந்த தொழிலாக இருந்தாலும் தெளிவான பார்வை இருந்தால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும். ஒரு சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுத்த பிறகு, மீண்டும் சுரங்கங்களை மூடுவதும் அந்த இடத்தை பசுமையாக மாற்றுவதும் குத்தகைதாரர்களின் பொறுப்பு.

இதற்கான சட்டதிருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படும் பட்சத்தில் பல்லுயிர்களும் பாதுகாக்கப்படும்.

இதையும் படிங்க: பொதுமக்களின் உரிமையைப் பாதுகாக்க முயலும் நீதித்துறை

Intro:Body:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரிதான் எரிபொருள்

சுரங்கத்துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திa சுரங்கத்துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத் துடன் சுரங்கத்துறையில் ஈடுபடவும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. சுரங்கத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக,  சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுடறை சட்டம் 1957 மற்றும் சுரங்க மற்றும் தாது சட்டம் 2015-ல்  திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதனால், சுரங்கத்துறையில் போட்டிகள் ஏற்பட்டு, உற்பத்தி அதிகரிக்கும். தொடர்ந்து, தாதுக்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. புதிய சட்டசீர்திருத்தம், தாதுக்களின்  விலை குறைப்புக்கு வகுத்தாலும், சுரங்கத் தொழிலில் உள்ள  சிக்கல்களை முழுமையாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுரங்கத்துறையில் அதிகளவில் போட்டியாளர்களை கொண்டு வருவதற்கு,  அரசு தரரப்பில் இருக்கும் தடைகளை முற்றிலும் நீக்க வேண்டும். இதனால், 100 சதவிகிதம் வெளிநாட்டு முதலீட்டை கவர முடியும். இதுவரை, இந்தியாவில் சுரங்கத் தொழிலில் அனுபவமுள்ள மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே சுரங்கத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டன. இவர்களே ஏலத்திலும் பங்கெடுத்தனர். இப்போதாவது,  வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்ததற்கு நன்றி. இதன் காரணமாக பீபோடி, க்ளென்கோர், ரியோடின்டோ போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உருவாகியுள்ளது. சிமின்ட், இரும்பு மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்பட நிலக்கரி உற்பத்தியை உறுதி செய்வது அவசியமாகிறது. கடந்த ஆண்டு நிலக்கரி தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள அதிகப்படியான இடைவெளி காரணமாக வெளிநாடுகளில் இருந்து  23 பில்லியன் டன் நிலக்கரியை இந்தியா  இறக்குமதி செய்தது.  உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்கும் போது, 13 கோடி டன் நிலக்கரி இறக்குமதி குறையும். இதனால், பெருமளவு செலவினம் குறையவும் வாய்ப்பு உருவாகும்.

புதிய சீர்திருத்தம் காரணமாக, நிலக்கரி சுரங்கங்களை  ஏலம் எடுக்க அதிக போட்டி நிலவும். நிலக்கரி உற்பத்தியில் அதிகரிக்கும் என மத்திய அரசு நம்புகிறது. நிலக்கரி உற்பத்தி மற்றும் அதனை பிரித்தெடுப்பதில் நம் நாட்டுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கிடைக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது. ஒவ்வோரு ஆண்டும் தேவையான அளவு நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால், தொழில்துறை மிகவும் பாதிக்கப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் முக்கால்வாசி பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த நிறுவனம் தன் இலக்கை எட்டுவதில் பின்தங்கியிருப்பதால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், அரசுக்கு அதிக செலவீனம் ஏற்படுகிறது. சுரங்கத் தொழில் தேசிய மயமாக்கப்பட்ட பிறகு 1973ம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்தே கனரகத் தொழில்களுக்கு தேவையான மூலப் பொருள்களை வழங்குவதில் இந்த நிறுவனம் இலக்கை எட்டியதில்லை. இதனால், அந்த நிறுவனங்கள் மற்ற நிலக்கரி தேவைக்காக பிற நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டன. இதன் விளைவாகவே மோடி அரசு, சுரங்கத் துறையில் வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட  சரியான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் நிலக்கரி உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என்றும் இந்த அரசு நம்புகிறது. ' மகாரத்னா' அந்தஸ்த்தை பெற்ற கோல் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு 60 கோடி டன் நிலக்கரியை வெட்டி எடுக்கிறது.

2023-24ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டி எடுக்கும் வகையில் திறனையும் தொழில்நுட்பத்தையும் கோல் இந்தியா நிறுவனம் பெற வேண்டும். இல்லையென்றால், , தனியார் நிறுவனங்களின் போட்டியால் நஷ்டத்தைச் சந்தித்த பி.எ*ஸ.என்.எல் நிறுவனம் போல கோல் இந்தியா நிறுவனமும் மாறி விடும். வெளிநாட்டு முதலீடு , நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை  உருவாக்கும் மத்திய அரசு, 30 லட்சம் கோல் இந்தியா நிறுவன ஊழியர்களின் நலனிலும் கவனத்தை கொள்ள வேண்டும். நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த உத்திரவாதத்தை கவனத்தில் கொண்டு கோல் இந்தியா நிறுவனம் இன்னும் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களை கண்டறிந்து நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய ஆற்றலுடன் செயல்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடு பாயும் நேரத்தில் கோல் இந்தியா நிறுவனம் தன் திறனை மேம்படுத்தி இலக்குகளை எட்டுவது தேசத்தின் வளர்சிக்கு உதவியாக அமையும்.

கறுப்பு தங்கம் என்று அழைக்கப்படும் நிலக்கரியின் உற்பத்தி , இருப்பு மற்றும் இறக்குமதி செய்வது போன்ற விகிதங்கள் இந்தியாவில் சற்று வித்தியாசமானது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா நாடுகளுக்கு அடுத்தடிபயாக இந்தியாவில் அதிகளவில் நிலக்கரி பூமிக்கு அடியில் புதைந்துள்ளது. அதேவேளையில், இறக்குதி செய்வதிலும் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். அதாவது 16.2 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை நம் நாட்டுக்கு இறக்குமதி செய்கிறோம். இந்த பட்டியலில் 16.7 சதவிகிதத்துடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. கடந்த யு.பி.ஏ அரசு நிலக்கரி உற்பத்தியின் கழுத்தை நெரிக்கும் வகையில் செயல்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட தொழில் சட்டத்தை மீறி ,தங்களை சார்ந்தவர்களுக்கு சுரங்கத் தொழிலில் ஈடுபட அனுமதி அளித்து, நிலக்கரி ஊழல் ஏற்படவும் வழி வகுத்தது. கடந்த 1993- ம் ஆண்டு முதல் நடந்து வந்த ஊழல் காரணமாக உச்சநீதிமன்றம் 6 ஆண்டுகளுக்கு முன்பு 214 நிலக்கரிச் சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்தது.

ஆனால், மோடி அரசு நிலக்கரி உற்பத்தியை ஊக்குவிக்க 10 முக்கிய கொள்கைகளை வகுத்துள்ளது. அதில், இ- பிட்டிங் எனப்படும் இணையதள வாயிலாக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவது முக்கியமானது. இந்த முறையால் சுரங்கங்களை ஏலம் விடுவதில் , எடுப்பதில் வெளிப்படைத்தன்மை காணப்படும். கோல் இந்தியா உள்பட மற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது குறைக்கப்பட வேண்டும். நிலக்கரி இறக்குமதி செய்ய குறைந்த அளவே இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் இப்போது வரை 29 நிலக்கரி சுரங்கங்களே ஏலம் விடப்பட்டுள்ளன. சுரங்கங்களை ஏலம் விடுவது குத்தகைக்கு வழங்குவது போன்வற்றில்  சீர்திருத்தங்களை வெற்றிக்கரமாக அமல்படுத்துவதில் அரசு தரப்பில் உள்ள சுணக்கங்களை களையும் நேரம் இது. எந்த தொழிலாக இருந்தாலும் தெளிவான பார்வை இருந்தால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும். ஒரு சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுத்த பிறகு, மீண்டும் சுரங்கங்களை மூடுவதும் அந்த இடத்தை பசுமையாக மாற்றுவதும் குத்தகைதாரர்களின் பொறுப்பு . இதற்கான  சட்டதிருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தி கொண்டு மத்திய அரசு செயல்படும் பட்சத்தில் பல்லுயிர்களும் பாதுகாக்கப்படும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.