புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று அம்மாநில சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’மத்திய அரசு காஷ்மீர் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது பற்றி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் இணைக்க வேண்டும் என்று பலமுறை பிரதமர் மற்றும் நிதி, உள்துறை அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை எந்தவித பலனும் இல்லை.
யூனியன் பிரதேசங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாஜக கூட்டணி கட்சியினர் விவரம் தெரியாமல் பட்ஜெட் கூட்டத்தை ஏன் இன்னும் கூட்டவில்லை? மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த பின்னரே யூனியன் பிரதேசங்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும் என்ற விவரம்கூட அவர்களுக்கு தெரியவில்லை’ என்ரார்.