உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பயணம்செய்த நிலையில், அவர் சென்ற கான்வாய் விபத்துக்குள்ளானது.
இதில் பிரியங்கா காந்திக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதேவேளை, அவர் கான்வாயின் நான்கு கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டன.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங் குடும்பத்தினரைப் பார்க்க, பிரியங்கா காந்தி ராம்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளின்பேரில் மக்களைத் தூண்டிவிடும் ராகுல் - பாஜக குற்றச்சாட்டு