ETV Bharat / bharat

ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர் - Classes on loudspeakers

பிலாஸ்பூர்: கரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒலிபெருக்கி மூலம் கொமகான் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

Classes on loudspeakers: Chhattisgarh teacher beat odds of online classes

author img

By

Published : Jul 24, 2020, 6:30 AM IST

கரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய காரணங்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக பள்ளிக்குச் சென்று பாடங்களை கற்றுவந்த மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு நகர வாசி மாணவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், கிராமப்புற மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது. போதிய இணையசேவை இல்லாமல் உள்ள கிராமங்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்று வருகின்றனர்.

அந்த வகையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி கொமகான் கிராமத்தில் 220 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். மகாசமுந்த் மாவட்டத்தின் கொமகான் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் விஜய் சர்மா.

இவர் கொமகான் கிராமத்தில் உள்ள பக்பஹாரா பகுதியில் நான்கு ஒலிபெருக்கி அமைத்து மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருகிறார். இவரது வருகையை அறிந்து கொமகான், லுகுபாலி, கோய்னாபஹ்ரா ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் புத்தகங்களுடன் பக்பஹாரா பகுதிக்கு வந்தடைகின்றனர்.

அங்கு அவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து பாடங்களை கற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும் அண்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வரும் ஆசிரியர்கள் மத்தியில், ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்தும் விஜய் சர்மா போன்ற பல ஆசிரியர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.