குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், "ஏழைகளுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் உள்ளது.
இதனால் ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளிகள் என்ன செய்வார்கள், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. போராட்டம் அமைதியாக நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமிய அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: சந்திரசேகர் ஆசாத்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!