மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த 16ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு சாதுக்கள் உள்பட மூன்று நபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலைசெய்தனர். இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் இச்சம்பவம் தொடர்பாக பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை சிஐடி மேற்கொள்ள இருக்கிறது.
இதையும் படிங்க: 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் வழிமுறைகளை வெளியிடுங்கள்'