தெலங்கானா மாநிலத்தின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மின்சார ஆலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இச்சம்பம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதன் உண்மை நிலையை அறிவதற்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இந்த வழக்கை சிஐடி-க்கு மாற்றியுள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.