குஜராத்தில் தேவ்னி மோரி பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் குளோரின் ரசாயன வாயு கசிந்ததில் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ரசாயன வாயு கசிந்ததால் தேவ்னி மோரி பகுதியை சுற்றியுள்ள இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். தீயணைப்பு வாகனத்தின் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிநீர் ஆலையில் 60 கிலோ குளோரின் ரசாயன வாயு இருப்பதாகக் கூறப்படுகிறது.