கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டம் சித்திரப்பூரா மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலர் ஒன்றிணைந்து கடல் அலைகளிலிருந்து தங்களை காக்க தடுப்புச்சுவர் ஒன்றினை கட்டிவருகின்றனர்.
இது குறித்து பேசிய அக்கிராம மக்கள், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடல் சீற்றத்திலிருந்து எங்களை காக்க பாறைகளை அடுக்கி வைத்திருந்தோம். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் அனைத்து பாறைகளும் சிதைந்து தடுப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.
இதையடுத்து பலமுறை தங்களை கடல் சீற்றத்திலிருந்து காக்க தடுப்புச்சுவர் அமைத்துத்தரும்படி அரசு அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் எங்களது எந்த கோரிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்தையும், கிராம மக்களையும் காக்க நாங்களே அரசின் எந்தவொரு உதவியையும் எதிர்பாராமல் தடுப்புச் சுவர் கட்டும் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்” என்றனர்.