ETV Bharat / bharat

கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபான வருமானம் நிதிஷ்குமாரின் பாக்கெட்டிற்குள் செல்கிறது!

author img

By

Published : Oct 27, 2020, 5:15 PM IST

பாட்னா : ”பிகாரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுவின் மூலம் வரும் லாபம் அனைத்தும் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாக்கெட்டுக்கு செல்கிறதா?” என லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தேசியத் தலைவர் சிராக் பாஸ்வான் கேள்வியெழுப்பி உள்ளார்.

கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானங்கள் நிதிஷ்குமாரின் பாக்கெட்டிற்குள் செல்கிறது!

பிகார் மாநிலத்தின் ஜே.டி.யூ தலைமையிலான அரசின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இந்த மாத இறுதியிலும், நவம்பர் மாதத்திலும் மூன்று கட்டங்களாக நடைபெற்றவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்து வந்து, அண்மையில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து களம் காண்கிறது. சிராக் பாஸ்வானின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், அவரது கட்சித் தொண்டர்களையும் கணிசமான அளவு பொதுமக்களையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இன்று (அக்.27) பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "பிகார் மாநிலத்தில் முழுமையான மது விலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அனைவருக்கும் தங்குத் தடையின்றி மதுபானம் கிடைக்கிறது. மதுபானங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படுகின்றன. கடத்தப்படுகின்றன.

அரசும் நிர்வாகமும் ஒன்றிணைந்து மது விநியோகத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒன்றும் இது பற்றி தெரியாத அப்பாவி இல்லை. தடை நீக்கப்பட்டால், மதுபானம் மூலம் வரும் வருமானம் அரசுக்கு செல்லும்.

ஆனால் இந்தத் தடை நீடித்து, மது விற்பனையும் நடைபெறுகிறது. கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுவின் மூலம் வரும் லாபம் அனைத்தும் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாக்கெட்டுக்குள் செல்கிறதா எனத் தெரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் 1.25 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு தொகுப்புக்கு போட்டியாக பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சாத் நிஷ்சே திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் 40 விழுக்காடு பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர். 'சாத் நிஷ்சே' (ஏழு தீர்வுகள்) திட்டத்தில் நடந்துள்ள இமாலய ஊழல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாதா?

முதலமைச்சர் நிதிஷ்குமாரை ’ஊழல் தலைவர்’ என்றுதான் அழைக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் லாலுஜியைப் போல இந்நாள் முதலமைச்சர் நிதிஷ்ஜியும் விரைவில் சிறைக்குச் செல்ல வேண்டும். எங்கள் கட்சியின் சார்பில் பிகார் மக்களுக்கு நாங்கள் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம்.

எல்ஜேபி ஆட்சிக்கு வரும்போது இந்த ஊழல் முறைகேடுகள் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள், முதலமைச்சராக இருந்தாலுமோ அல்லது உயர் அலுவலராக இருந்தாலுமோ நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.