ETV Bharat / bharat

இந்தியா விவகாரத்தில் சீனா தனது வார்த்தைகளை காப்பாற்றுவதில்லை: முன்னாள் தூதர் - மூத்த செய்தியாளர் அரோனிம் பூயான்

இந்தியா-சீனா உறவு குறித்து முன்னாள் இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே மூத்த செய்தியாளர் அரோனிம் பூயானுக்கு கொடுத்த பேட்டியின் தமிழாக்கம் இதோ...

China
China
author img

By

Published : Aug 26, 2020, 4:29 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய -சீன எல்லைப் பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், சீன குடிமக்களுக்கான விசாவை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த பரபரபான சூழலில் இந்தியாவுக்கு சீனா எதிரியல்ல என்று சீன ஊடகம் மீண்டும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய தூதரக அதிகாரி, ‘சீனா தனது வார்த்தைக்கு ஏற்ப நடப்பதில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”எல்லை பிரச்சனைக்கு பிறகு சீனாவுக்கான விசாவை இந்தியா ரத்து செய்வதாக வெளியான தகவல், சீன எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு’ என்ற தலைப்பில் சீனாவின் அரசுக்கு ஆதரவான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை வெளியானது. அதில், சீனாவின் தொழில்முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்துறை நிபுணர்கள், சட்டக் குழுக்கள் ஆகியோருக்கான விசாவை இந்திய அரசு ரத்துசெய்யப்போவதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ”

இந்த தகவல் உண்மையாக இருப்பின், எல்லைப் பிரச்சனையை மையப்படுத்தி அரசியல் ரீதியாக சீனாவுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தும் செயல்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “சீனாவை தனது எதிரியாக இந்தியா நினைக்கிறது” என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக விவகாரங்களுக்கான செங்டூ மையத்தின் தலைவரான லோங் ஜிங்சுன் கூறியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “எல்லை பிரச்சனைகளை காரணம் காட்டி சீன நாட்டினரின் விசாக்களை ரத்து செய்வது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. சீனாவுக்கு எதிரான உணர்வுகளை இந்திய மக்களிடம் தூண்டி, அதன் மூலம் தாங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாட்டுப்பற்று மிக்கவர்கள் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள, அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 45 ஆண்டுகளில் முதல்முறையாக எல்ஏசி பகுதியில் ஏற்பட்ட இருதரப்ப்பு மோதல்களின் எதிரொலியாக, புகழ்பெற்ற டிக்டாக் உள்பட 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. அதன் தொடர்ச்சியாகவே, சீன நாட்டினருக்கான விசாவையும் இந்திய அரசு ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதட்டமான சூழலை மேலும் அதிகரிக்கும் விதமாக, கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் சூ, தெப்சாங் மற்றும் கோக்ரா ஆகிய பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதுகுறித்து இம்மாத தொடக்கத்தில் இந்திய – சீன அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் விசா விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

”ஒவ்வொருமுறை சிக்கல் ஏற்படும்போதும் சீன விசாவை தடை செய்வதை இந்தியா வழக்கமான ஒன்றாகக் கொண்டுள்ளது” என்று லோங் கூறியதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது”.

"கோவிட் -19 மற்றும் சீனாவுக்கு எதிரான உணர்வு ஆகியவை, சீனர்களின் இந்திய வருகையை மட்டுப்படுத்தும். இதனால், பேரிடருக்கு முன்னர் இருந்த இந்திய – சீன உறவுகள் மீண்டும் அதே நிலையில் தொடரும் என்பது சந்தேகமே. அதற்கு ஓராண்டு அல்லது அதற்கு மேல் ஆகலாம்” என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய கல்வி மையங்களின் கூட்டிணைவோடு சீனாவின் கன்ஃபூசியஸ் மையத்தை கட்டமைக்கும் முடிவை இந்திய கல்வி அமைச்சகம் மறுஆய்வு செய்கிறது.

கன்ஃபூசியஸ் கல்வி மையங்களை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் கூட்டிணைவோடு சீனாவிலும் வெளிநாடுகளிலும் கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கூட்டிணைவிற்கான நிதியை சீனாவின் கல்வி அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற ஹான்பென் (சீன மொழிக்கான சர்வதேச கவுன்சில்) அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன மொழி மற்றும் பண்பாட்டை உலகளவில் பயிற்றுவிக்கும் இந்த நடவடிக்கை, தற்போது சீனாவின் உலகளாவிய அளவிலான ஊடுருவல் காரணமாக விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட கன்ஃபூசியஸ் மையத்தின் பயிற்சி, ஹான்பென் நிதியின் மூலம் கட்டமைக்கப்பட்டு பல்கலைக்கழகங்களால் மேற்பார்வையிடப்பட்டது. உலகளவில் இம்மையம் செயல்படும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கூட்டிணைவு மூலம் செயல்பட்டு வந்தது. இதற்கான நிதியை ஹான்பென் மற்றும் பயிற்சி நடத்தும் மையங்கள் பங்கிட்டு வந்தன.

ஃபிரான்ஸ் நாட்டின் அல்லியன்ஸ் ஃப்ரான்கைஸ் மற்றும் ஜெர்மனியின் கோதே- மையம் ஆகியவை தங்கள் நாட்டு மொழி மற்றும் பண்பாட்டை மற்ற நாடுகளில் பிரபலப்படுத்துவதைப் போலவே, தங்களது கன்ஃபூசியஸ் மையத்தைக் கொண்டுவர சீனா முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஆனால் அல்லியன்ஸ் ஃப்ரான்கைஸ் மற்றும் கோதே- மையத்தைப் போல சுயநிதியில் செயல்படாமல், சீன அரசின் நிதியுடன் பிற நாடுகளின் கல்வி மையங்களோடு கூட்டிணைவு வைக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது.

சீனாவின் இந்த கன்ஃபூசியஸ் மையத்தின் பயிற்சித் திட்டமானது தனது “அதிகாரத்தை” நீட்டிப்பு செய்ய சீனா மேற்கொள்ளும் திட்டம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் இந்தியா வெளியிட்ட முதலீட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கையானது ‘ சீன முதலீட்டாளர்களின் மீது இந்தியா பாகுபாடு கொண்டிருப்பதைக் காட்டுகிறது” என்று குளோபல் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கதவுகள் இந்தியாவில் 100 சதவீதம் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு துறைகளில் தடைகள் விலக்கப்பட்டுள்ளன.

ஆயினும், இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகள், குறிப்பாக சீனா இந்த நடவடிக்கையை சாதகமாக்கிக் கொண்டு குறைந்த மதிப்பீட்டில் இந்திய நிறுவனங்களின் பங்குகளை கையகப்படுத்தி, இந்த இக்கட்டான சூழலில் இந்திய பொருளாதாரத்தை நகர்த்தும் முக்கிய சக்தியாக மாறக்கூடும் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

இது போன்ற ‘சந்தர்ப்பவாத’ முதலீடுகளை தவிர்ப்பதற்காக வெளிநாட்டு பரிமாற்ற நிர்வாக (கடனில்லா முதலீடுகள்) விதிகள், 2019 (திருத்தப்பட்ட விதிகள்) பிரிவில் திருத்தங்களைச் செய்யும் அறிவிக்கைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்த சீரமைக்கப்பட்ட விதிகளின் படி, இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு நாட்டின் முதலீட்டாளரும், இந்தியாவில் முதலீடுகள் செய்வதற்கு, இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த விதிகள் ஏப்ரல் 22 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் இந்த கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ள சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே, சீனா எப்போதுமே தனது வார்த்தைகளை செயலில் காட்டியதில்லை என்றார்.

“நீங்கள் (சீனா) இந்தியாவுக்கு எதிரி இல்லையென்றால், எதற்காக லடாக் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்ளவில்லை?” என்று, ஈடிவி கேட்ட கேள்விக்கு பம்பாவாலே பதிலளித்துள்ளார்.

சீன செயலிகள் தடையால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பம்பாவாலே, இந்த நடவடிக்கையால் சீனாவின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும் என்றார்.

குறிப்பாக டிக்டாக் செயலி தடையால் சீனாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், ”இந்த செயலியை தடை செய்வதில் முன்னுதாரணமாக இருந்த இந்தியாவால், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரிய நாடுகளும் தடை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன” என்றார்.

இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனையை செய்யும் சீனா, அமெரிக்காவுடன் பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக தென் சீனக் கடல் பகுதி நாடுகள் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதி நாடான ஜப்பான் பகுதிகளில் தனது விரிவாக்க கொள்கைகளை வலுவாக்குவதால் சீனாவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியிலிருந்து, ஆப்பிரிக்காவின் கிழக்கு கடல் பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்த, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் கூட்டிணைந்து இந்தியா முயற்சிகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.