இந்தியா- சீனாவின் எல்லை நிலைப்பாடு, வன்முறை மற்றும் மோதல் குறித்து, இந்திய ஆயுதப்படை ராணுவத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் துணை உதவி தளபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பிரிகேடியர் பிரபீர் குமார் சன்யால் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துகொண்டார்.
ஈடிவி பாரத் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி: கால்வான் மோதலின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா ஏன் ஒரு புள்ளிவிவரம் கூட தெரிவிக்கவில்லை?
பதில்: சீனா நிர்வாகமும் அதன் ராணுவமும் மிகவும் ரகசியமானவை. அவர்கள் தங்கள் குடிமக்களிடமிருந்தும் உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை. இதுமட்டுமின்றி தியான்சதுக்கம் போராட்டம், கோவிட்-19 வைரஸ் உயிரிழப்பு ஆகியவை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சீனத் தரப்பில் அலுவலர் உள்பட குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உண்மை ஒருபோதும் சீனாவிலிருந்து வெளிவராது.
கேள்வி: குளோபல் டைம்ஸ், இதர செய்தி தளங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சீன தரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசவில்லை. இதற்கு சுய கட்டுப்பாடு காரணமா? இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: குளோபல் டைம்ஸ் என்பது சீனாவில் கம்யூனிச அரசாங்கத்தின் ஊதுகுழலாகும். மற்ற பத்திரிகை மற்றும் இதர செய்தி தளங்கள் ஆகியவை சீனாவின் வெளிச்சத்தை மட்டும் காட்ட வாங்கப்பட்டுள்ளன. இந்தியா அதை செய்யவில்லை.
உள்நாட்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் சீனா ஒரு 'பழிவாங்கும் காரணியை' தவிர்க்க விரும்புகிறது. பெய்ஜிங்கில் பூட்டுதல் (பொதுஅடைப்பு) நடவடிக்கைக்கு பின்னரும் கோவிட்-19 பெருந்தொற்று அலை எழுந்துள்ளது.
மேலும் ஜப்பானுடன், தென் சீனக் கடலுடன் சீனாவுக்கு பிரச்னைகள் உள்ளன. அதிபர் ஷி ஜின்பிங் மீது சீன மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் வேறு பிரச்னை நிலவுகிறது.
கேள்வி: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம் 16ஆம் தேதி டோக்லாம் பிரச்னை உருவெடுத்தது. இதில் ஏதேனும் இணைப்பை காண்கிறீர்களா?
பதில்: அதனுடன் (டோக்லாம்) இதனை (கிழக்கு லடாக்) இணைப்பது கடினம். இந்த சிக்கல் லடாக்கில் சீன கட்டமைப்போடு தொடங்கியது. மோதல்கள் வெடித்தன, நிகழ்வுகள் எல்லாவற்றையும் முந்தின.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை கோடு, இரு தரப்பு படைகளால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருபுறமும் ஊடுருவல் நிகழும்போது சச்சரவுகள் வெடிக்கும். அதுவரை, சண்டைகள் கைகளைப் பயன்படுத்துவதாக இருக்கலாம்.
ஆனால் 15-16ஆம் தேதி இரவுகளில் இரும்பு கம்பிகள் மற்றும் குச்சிகளைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது இருநாட்டு படையினரின் நடத்தை வகை பற்றிய புரிதலின் நிறத்தை மாற்றியுள்ளது.
கேள்வி: 'ராணுவ ஒப்பந்தங்கள்' ஏதேனும் ஒரு சர்வதேச மாநாட்டின் கீழ் வருகிறதா?
பதில்: எல்லை விவாதங்கள் ஜெனீவா மாநாட்டின் கீழ் வருகின்றன. படைகள் நிராயுதபாணிகளாக இருக்க வேண்டும் என்பது நெறிமுறை. அதிபர் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதிலிருந்து, சீன ராணுவம் அவருக்கு கீழ் செயல்பட்டு அவருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கிறது.
இதை ஜனாதிபதி ஜி ஜிங்பிங் ஆரம்பித்தாரா என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அவர்களின் மோசமான நடத்தை நம்மிடம் இருந்த புரிதலை வருத்தப்படுத்தியுள்ளது. அடுத்த முறை எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்கிறோம்.
கேள்வி: இது 370 வது பிரிவை அகற்றுவதற்கான வீழ்ச்சியா?
பதில்: சீனா ஏற்படுத்திய கோபத்தை பல்வேறு பிரச்னைகள் மேற்கோள் காட்டியுள்ளது. அத்தகைய ஒரு பிரச்னை நாடாளுமன்றம் அக்சாய் சின் பற்றி விவாதித்தபோது இருந்தது.
இரண்டாவதாக, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது. இதுபோன்ற சிறப்பு விதிகளை ரத்து செய்வதன் மூலம், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (China-Pakistan Economic Corridor) இந்திய நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று சீனா நினைக்கிறது.
ஏற்கனவே கில்கிட்-பலுசிஸ்தான் இந்தியாவின் ஒரு பிரதேசம் என்று இந்தியா கூறியுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் கிழக்கு லடாக்கில் நடவடிக்கை எடுக்க சீனாவை ஊக்குவித்திருக்கலாம்.
கேள்வி: லடாக்கில் பகுதியில் நிலவும் இந்திய நேபாளம் பிரச்னையை மையப்படுத்த சீனா முயற்சிக்கிறதா?
பதில்: நேபாளத்தின் மறுசீரமைப்பு அரசியல் வரைபடம் சீனா வடிவமைத்தது. பிரதமர் ஓலியும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நீண்ட தொடர்பு வைத்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்ச அழுத்தம் கொடுக்க இது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ’ஜெகன்நாதர் நம்மை மன்னிப்பார்’ - ரத யாத்திரைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்