ETV Bharat / bharat

ஊரடங்கை தளர்த்திய நாடுகளில் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பு! - அமெரிக்கா

பெய்ஜிங்: கோவிட்-19 பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சீனாவில் தளர்த்தப்பட்டதை அடுத்து அந்நாட்டில் கரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

china-korea-egypt-rise-in-virus-cases-as-curbs-ease

author img

By

Published : Jun 14, 2020, 5:24 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரசால் இதுவரை 219 நாடுகளைச் சேர்ந்த 78 லட்சத்து 92 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 4 லட்சத்து 32 ஆயிரத்து 62 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கோவிட்-19 பரவலைத் தடுக்க எந்தெந்த நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டிருக்கிறதோ அந்த நாடுகளில் எல்லாம் தற்போது கரோனா தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாக புள்ளி விவரங்களின் ஊடாக அறிய முடிகிறது.

இரண்டு மாதங்களில் நேற்று சீனா தனது அதிகபட்ச கரோனா வைரஸ் நோய் பாதிப்பை பதிவுசெய்திருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரேநாளில் 4,634ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல, வணிக மற்றும் பயணங்களுக்கான தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து தென் கொரியாவிலும் கோவிட்-19 தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரேசில், இந்தியா, எகிப்து, உக்ரைன், மற்றும் வடக்கு மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளிலும் ஜூன் 12 ஆம் தேதியன்று அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளன.

20 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அதிகரித்துவரும் பாதிப்புகள் பெரும்பாலும் அதன் மிகப்பெரிய உணவுச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்நகரம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு மூடப்படுவதாக சீன அரசு அதிகாரப்பூர்வ அறிவித்தது.

அமெரிக்காவில், பொது சுகாதார உயர் அலுவலர்களின் எச்சரிக்கைகளை மீறி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வணிக நிறுவனங்களை, தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டதை அடுத்து சில மாகாணங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, உட்டா, ஓரிகான், அரிசோனா, நியூ ஆர்லியன்ஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய மாகாணங்களில் உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகள், பார்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பாதிப்பு அதிகரித்தது கவனிக்கத்தக்கது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இரவு கொண்டாட்ட நிறுவனங்கள், தேவாலய வழிப்பாடுகள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரியா நாட்டின் 26 மில்லியன் மக்களில் வாழும் சியோலில் 30 பேருக்கு நேற்று ஒரேநாளில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக. தென் கொரியா தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அரபு நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான எகிப்தில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 677 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைனில் 753 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில், பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கோவிட்-19 பரவல் சமூக பரவல் கட்டத்தை அடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.