சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுநோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 170ஆக அதிகரித்துள்ளது. இதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஆயிரத்து 370 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், நிமோனியா வைரஸால் ஏழாயிரத்து 711 பாதிப்படைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் கடந்த டிசம்பர் மாதத்தில் மெள்ள மெள்ள நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் கரோனா வைரஸ் மக்களை மிகக் கொடூரமாகக் கொலைசெய்யும் அரக்கனைப் போன்றுள்ளதாகக் கடந்த செவ்வாயன்று அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். மேலும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தங்களது அரசு தீவிர முனைப்பில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார்.
ஆனால் இன்னும் சில வாரங்களில் கரோனா வைரஸ் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் சீனாவில் உள்ள 20 நகரங்களை முடக்கியுள்ளதால் இது அந்நாட்டின் அரசினை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஹாங்காங்-சீனா இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மருந்தகங்களில் முகக்கவசம் வாங்குவதற்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாங்கும் நிலையில் உள்ளனர். தேவை அதிகரிப்பின் காரணமாக முகக்கவசத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. எனினும் பதற்றமான மனநிலையில் உள்ள தங்களுக்கு விலை ஒரு பொருட்டல்ல எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : அமித் ஷா தேர்தல் பரப்புரைக்கு தடைவிதிக்க ஆம் ஆத்மி கட்சி கடிதம்!