இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) கொள்கையில் சமீபத்தில் முக்கிய கொள்கை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா என்ற வங்கி இந்திய தனியார் வங்கி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி. பங்குகளை வாங்கியப் பிறகு இந்த முடிவை இந்திய அரசு எடுத்தது.
உண்மையில், சமீபத்திய திருத்தம் நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்கள் மீதான மூலோபாய பிடியில், அதன் முயற்சியைத் தடுத்ததால் சீனா மட்டுமே கோபமடைகிறது.
இந்தியாவின் 18 முக்கிய தொடக்கங்களில் சீன முதலீடுகள் ரூ.30 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ப்ரூக்கிங்ஸ் இந்தியா அறிக்கையின்படி, பல சீன நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் முதல் ஆட்டோமொபைல்கள் வரை பலதரப்பட்ட இந்தியத் தொழில்களில் அதிக முதலீடு செய்துள்ளன. சீன நேரடி முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது.
தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைச் சீனா தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், ஏற்கனவே தங்கள் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்துள்ளன.
சீனா தனது சித்து விளையாட்டை பிரயோகப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அந்த நாடுகள் கோபமடைந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவும், சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளது அந்நாட்டை மேலும் கோபமடையச் செய்துள்ளது. இதனால் பொறுமை இழந்து ஒரு படி மேலே சென்று, சீனா அந்நிய நேரடி முதலீட்டை தடை செய்வது பாரபட்சமானது என்று அறைக்கூவல் விடுக்கிறது.
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கையில், கோவிட்-19 பேரழிவு விளைவுகளை சீனா தொடர்ந்து பயன்படுத்துகிறது. அபரிமிதமான நிதி ஆதாரங்களும், அரசியல் ஆதரவும் கொண்ட சீன நிறுவனங்கள், மற்ற நாடுகளில் தங்கள் பங்குகளை அதிகரிக்க போட்டியிடுகின்றன.
இந்தச் சந்தர்ப்பவாத முதலீடுகளை முறியடிக்கும் முயற்சிகளும் மறுபுறம் நடந்துவருகின்றன. உலக வர்த்தக அமைப்பு (WTO) உறுப்பினர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், பிற அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்க சீனா தொடர்ந்து தவறிவிட்டது. இதற்கிடையில் சீன தயாரிப்புகள் தரமில்லாதவை என்றும், 70 சதவீத தயாரிப்புகள் கள்ளத்தனமானவை என்றும் ஏகப்பட்ட விமர்சன குரல்கள் எழுந்துள்ளன.
பட்டாசு முதல் பொம்மைகள் வரை, சீன தயாரிப்புகள் இந்தியச் சந்தைகளில் மிகுந்து காணப்படுகின்றன. இது நமது உள்நாட்டு உற்பத்தித் துறையைப் பாதிக்கிறது. மிகப் பெரிய சக்தியாக விளங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், சீனா பலமுறை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளது.
இந்நிலையில் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகள் தங்கள் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளைத் திருத்துகின்றன. இது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், அந்நிய நேரடி முதலீட்டின் பிரிவு, உலக வணிக அமைப்பின் கீழ் இல்லை என்று கூறுகின்றனர்.
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு கொள்கை முடிவு முற்றிலும் நியாயமானது. இந்தியாவின் நடவடிக்கைகள் சீனாவின் காயத்தில் உப்பை அள்ளி தேய்ப்பது போல் உள்ளது. இது சீனா மேலும் எரிச்சல் கொள்ள காரணமாகிறது. இந்நேரத்தில் சீனாவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்துவோம்.!