ETV Bharat / bharat

சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க உண்டியலை உடைத்த அக்கா-தம்பி! - சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த அக்கா-தம்பி சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு செய்து தங்களது உண்டியலை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க உண்டியலை உடைத்த அக்கா-தம்பி!

author img

By

Published : Aug 1, 2020, 12:43 PM IST

ஆந்திராவில் டிராக்டெர் இல்லாத விவசாயி ஒருவர் தனது இரு மகள்களைக் கொண்டு உழவு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதைப் பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஒரு டிராக்டரை பரிசாக அளித்தார். இதனையடுத்து சோனு சூட்டின் சமூக சேவைக் குறித்து பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இதனைப் பார்த்த டெல்லி திகாரைச் சேர்ந்த லக்‌ஷயாவும் அவரது தம்பி தீக்‌ஷாவும் சேர்ந்து சோனு சூட்டின் சமூக சேவைக்கு உதவும் விதமாக தங்களின் சேமிப்பு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொடுக்க முன்வந்துள்ளனர்.

சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க உண்டியலை உடைத்த அக்கா-தம்பி!

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய இருவரும், “வெள்ளித் திரையில் வில்லனாக நடிக்கும் சோனு சூட், நிஜ வாழ்க்கை ஒரு ஹீரோ” என்றனர். மேலும், உண்டியலில் உள்ள பணத்தை எப்படியாவது சோனு சூட்டிற்கு அனுப்பி வையுங்கள் என அவர்கள், அவர்களின் பெற்றோரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க...'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.