ETV Bharat / bharat

தெலங்கானாவில் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறை! - தெலங்கானா குழந்தை திருமணம்

ஹைதராபாத்: போங்கிர் பகுதியில் நடைபெறயிருந்த குழந்தைத் திருமணத்தை காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வ அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறை

author img

By

Published : Mar 12, 2020, 2:40 PM IST

தெலங்கானா மாநிலம் போங்கிர் மாவட்ட பகுதியில், சட்டத்திற்குப் புறம்பாக குழந்தை திருமணம் நடைபெறவுள்ளதாக ’ஷீ’ (SHE) அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. சவுத்துப்பல் என்ற கிராமத்தில், மார்ச் 10ஆம் தேதி நடைபெறவிருந்த இத்திருமணத்தை நிறுத்த ’ஷீ’ அமைப்பு விரைந்தது.

இதற்காக போங்கிர் பகுதி காவல்துறையினர் உதவியை நாடியது. தகவலறிந்த காவல்துறையினர், ஷீ அமைப்புடன் இணைந்து களத்தில் இறங்கினர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த காவல் ஆணையர் மகேஷ் பகவத் கூறும்போது, திருமணத்துக்கு தயார்படுத்தியிருந்த குழந்தை எட்டாம் வகுப்புதான் படித்து வருகிறார். 18 வயதிற்கும் கீழே இருக்கும் அந்த பெண் குழந்தையை, 21 வயது நிரம்பிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று, இரு வீட்டாருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். மீண்டும் அந்த குழந்தை பள்ளிக்குச் செல்ல வழி வகுத்தோம் என்றார்.

’ஷீ’ அமைப்பு இதுவரை 73 குழந்தைத் திருமணங்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி டொனால்ட் ட்ரம்ப் பல்லில்லாத பாம்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.