2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, முப்படைத் தலைமைத் தளபதி (Chief of Defence Staff) பதவி விரைவில் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, டிசம்பர் மாதம் இறுதியில் ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், முப்படைத் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நேற்று பொறுப்பேற்கையில், அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள ராணுவச் சீருடையில் கம்பீரமாகக் காட்சியளித்தார். அந்தச் சீருடை ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, ஒத்திசைவு ஆகிய இந்திய ராணுவத்தின் முதன்மை இலக்குகளை உணர்ந்துவதாக அமைந்துள்ளது.
உடை :
13 லட்சம் ராணுவத்தினர் அணிந்திருக்கும் அதே ராணுவ பச்சை நிற சீருடையைத்தான் முப்படைத் தலைமைத் தளபதிபதியும் அணிகிறார்.
முத்திரை:
வாளின் மீது மூன்று தலைகள் கொண்ட சிங்கம் நிற்க, அதனடியில் நங்கூரத்தின் மீது கழுகு பறப்பது போன்று காட்சியளிக்கிறது. இது ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைகளையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தத் தங்க நிற சின்னமானது, தளபதி அணியும் தொப்பி , பெல்ட் பக்கில், தோள்பட்டை, தளபதி செல்லும் காரில் பொறுத்தப்பட்டுள்ள கொடி ஆகியவற்றில் காணப்படும்.
இதையும் படிங்க : பொருளாதாரம் குறித்து ப. சிதம்பரத்தின் பிரத்யேக பேட்டி!