உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே. இவர் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுக்கு பின், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
கடந்த ஆண்டு அயோத்தி நில வழக்கில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்பை ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் வழங்கினர். அதில் எஸ்.ஏ.பாப்டேவும் ஒருவர்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் பாப்டேவின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற உளவுத் துறை சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரின் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் z பிரிவிலிருந்து, z ப்ளஸ் பிரிவுக்கு மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: பொருளாதாரத் தோல்வியை எப்போது ஒப்புக்கொள்வீர்கள் பிரதமரே?: ப.சிதம்பரம் கேள்வி!