ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ சேர்த்தது.
இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், ப. சிதம்பரம் தரப்பிலிருந்து சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த முன்பிணை மனுவை இன்று சிதம்பரம் திரும்பப்பெற்றுள்ளார்.