டெல்லியில் தப்லிகி ஜமாஅத் இஸ்லாமிய மாநாடு நடந்த தேதியன்று உத்தரப் பிரதேசத்தில் நாம நவமி கண்காட்சியை முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் நடத்தினார் என்று ஆங்கில முன்னணி பத்திரிகை ஆசிரியர் சித்தார்த் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு எதிராக இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நோக்கம் கொண்ட இழிவான செயல்.
உண்மைக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரின் கருத்தில் எங்கே குற்றம் உள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
-
UP government has filed an FIR against @thewire_in for carrying a story containing facts and only facts.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
No ‘fact’ is wrong or even alleged to be wrong. Where is the crime?
">UP government has filed an FIR against @thewire_in for carrying a story containing facts and only facts.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 2, 2020
No ‘fact’ is wrong or even alleged to be wrong. Where is the crime?UP government has filed an FIR against @thewire_in for carrying a story containing facts and only facts.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 2, 2020
No ‘fact’ is wrong or even alleged to be wrong. Where is the crime?
பத்திரிகையாளர் சித்தார்த் தனது ட்வீட்டில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி (ராம நவமி) வரை ராம கண்காட்சி வழக்கம் போல் தொடரும் என்றும் ராமர் பக்தர்களை பாதுகாப்பார் என்றும் கூறினார் செய்தி வெளியிட்டார்.
கோவிட்19 வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுக்க 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு பேருக்கும் அதிகமான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது சட்டப்படி குற்றமாகும்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர் மீது வழக்குப்பதிவு