டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த முகமூடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு அங்கிருந்த மாணவர்கள், பேராசிரியர்களை சரமாரியாத் தாக்கினர். இந்தத் தாக்குதலில், அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவி அயிஷ் கோஷ் உள்ளிட்ட பல மாணவர்களும், ஆசிரியர்களும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு முகமூடி கும்பலை ஏதுவியது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமார் தான் என குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், வன்முறைக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் ஜகதீஷ் குமார், ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த வன்முறைச் சம்பவம் துரதிஷ்டவசமானது. சொற்பொருக்குப் பெயர்பேன பல்கலைக்கழகம் இது. பிரச்னைகளுக்கு வன்முறை எப்போதும் தீர்வாகாது. பல்கலைக்கழகத்தில் அமைதி திரும்ப எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
புதிய செமஸ்டருக்கான தேர்வுப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தை ஒத்திவைத்துவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்காலம் வாருங்கள் எனத் தெரிவித்திருந்தார்.
துணை வேந்தர் கூறியதைக் குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், மாணவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை ஏற்று துணை வேந்தர் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.
-
The VC of JNU wants students to "put the past behind". He should follow his advice. He is the past. He should leave JNU.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The VC of JNU wants students to "put the past behind". He should follow his advice. He is the past. He should leave JNU.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 8, 2020The VC of JNU wants students to "put the past behind". He should follow his advice. He is the past. He should leave JNU.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 8, 2020
ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் சங்கமான ஏபிவிபி உறுப்பினர்களே இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியதாக ஜேஎன்யு மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தாக்குதல் தொடர்பாக இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யாத டெல்லி காவல் துறையினர், ஜேஎன்யு தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்க தலைவி அயிஷ் கோஷ், சில மாணவர்கள் மீது வேறொரு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜேஎன்யு விவகாரம்: தீபிகாவை சாடிய முன்னாள் மத்திய அமைச்சர்