ETV Bharat / bharat

தனிமைப்படுத்தப்படும் மையங்களின் அலட்சியத்தால் தொடர் உயிரிழப்புகள்!

author img

By

Published : May 28, 2020, 6:45 PM IST

ராய்பூர்: சத்தீஸ்கர் அரசின் தனிமைப்படுத்தும் மையங்களின் அலட்சியப்போக்கினால் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

chhattisgarh-quarantine-centres-in-bad-shape-10-deaths-recorded-so-far
தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தொடர் உயிரிழப்புகள்!

நாடு முழுவதிலுமிருந்து சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வரும் அவர்களை தமிமைப்படுத்துவதற்காக அம்மாநில அரசு, பள்ளிக;ள், அரசு கட்டங்களில் 14 நாட்கள் தங்கவைத்து தனிமைப்படுத்தி வருகிறது.

தொடர் மரணங்கள்

அவ்விடங்களில் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் மே 14ஆம் தேதி சரங்கா தனிமைப்படுத்தும் மையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மே 17ஆம் தேதி புனேவிலிருந்து வந்து முங்கிலி பகுதி மையத்தில் தங்கிருந்த ஆண் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். பல்லோத் தனிமைப்படுத்தும் மையத்தில் சூரஜ் யாதவ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மே 19ஆம் தேதி ராஜ்னந்கான் மையத்தில் மற்றொருவர் பாம்பு கடித்து மரணித்தார். மே 21ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் பல்ராம்பூர் மையத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். ராஜூ த்ரூ என்பவர் சந்தேகிக்கும் முறையில் இறந்துகிடந்தார்.

மே 20ஆம் தேதி அம்பிகாபூர் மையத்தில் ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மே 26ஆம் தேதி நான்கு வயது குழந்தை உட்பட பல்லோத் மையத்திலும் மே 28 ஆம் தேதி கரியாபாந்த மையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

தனிமைப்படுத்தும் மையங்களில் பராமரிப்பு முறையாக இல்லாத காரணத்தால் இதுபோல் தொடர்ந்து அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.

இதையும் படிங்க: பாபர் மசூதி வழக்கு; அத்வானி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் வாக்குமூலம் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.